
பாலன் மாரிராஜ் கருப்பசாமி முருகசாமி
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பெயரில் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம், தலைமை காவலர் ஞானவேல், காவலர்கள் மகேந்திரன் யுவராஜா, முத்து ஆகியோருடன் போலீஸ் டீம் ரோந்து பணியில் தீவிரப்பட்டிருந்தது.
அப்போது வாகராயம்பாளையம் பகுதியில் ரோந்து செல்லும்போது காவல் வாகனத்தைப் பார்த்து இருவர் ஓட ஆரம்பித்தனர். சந்தேகத்தின் பெயரில் அவர்களை விரட்டி பிடித்ததில் அவர்களின் பெயர்கள் முருகசாமி, மாரிராஜ் எனவும் கள்ளச் சாராயத்தை விற்பனைக்கு வைத்திருந்ததாகவும் கூறினர்.
மேலும் அதேபோல கிட்டாம்பாளையம் சாலையில் கருப்பசாமி, பாலன் ஆகியோரும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேற்படி நால்வரையும் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து கள்ளச் சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து மத்தியச் சிறைச் சாலைக்கு அனுப்பி வைத்தனர்.