தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீரேற்று நிலையப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/09/2021) ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, யானைப்பள்ளத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை விளக்கும் மாதிரி வடிவமைப்பினைப் பார்வையிட்டார். மேலும், கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், அதன் செயல்பாடுகளையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. தட்க்ஷிணாமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.