Skip to main content

தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு தலைமை காவலரின் கோரிக்கை கடிதம் - காவல் குழுக்களில் வைரல்

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Chief Constable's request letter to Tamil Nadu DGP Sylendra Babu

 

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர், சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிததத்தில், காவல்துறையினருக்காக ஏற்படுத்தப்பட்ட ‘உங்கள் துறையின் முதலமைச்சர்’ திட்டத்திற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறியுள்ளார். 

 

மேலும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; ‘அரசு ஆணைப்படி மாதத்திற்கு ஆறு நாட்கள் உணவுப்படி தொடர்ந்து வழங்கிட வேண்டும். சட்ட ஒழுங்கு காவலர்களுக்கு வழங்குவது போல், ஆயுதப்படை காவலர்களுக்கும் பெட்ரோல் அலோவன்ஸ் வழங்கிட வேண்டும். காவலர்கள் குடும்பம் பயன் பெறும் வகையில் காவலர் மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும். பட்டபடிப்பு முடித்த காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணி செய்யும் நாட்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். சென்னையில் இயங்குவது போல் சி.பி.எஸ்.இ. தரத்தில் பள்ளி அமைத்து கொடுக்க வேண்டும். வாராந்திர ஆய்வு முடித்து மறுநாள் காலை 7 மணிக்கு பணிக்கு ஆஜராக வழிவகுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலர்கள் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். காலை 9 மணிக்கு கைதுவழிக் காவல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாராந்திர கவாத்து மற்றும் களப்பணிக்கு அழைத்திட வேண்டும். பயணப்படி ஏற்கனவே 5% வழங்கியதுபோல், மீண்டும் வழங்கிட வேண்டும்.’ இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் காவல் குழுக்களின் இடையே வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்