Skip to main content

திரையரங்குகளைத் திறக்கும்போது மெரினாவை ஏன் திறக்கக்கூடாது?- உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

chennai merina beach chennai high court chennai corporation

 

 

மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்தி, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (11/11/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பில்லை  என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் என்ன தாமதம்? திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் மெரினா கடற்கரையைத் திறப்பதில் என்ன சிரமம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடாவிட்டால், பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்