Published on 14/02/2020 | Edited on 15/02/2020
தமிழக சுகாதாரத்துறையில் பணிபுரியும் செவிலியர்கள்,பகுதிநேர செவிலியர்கள், சமுதாய செவிலியர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பினர் சென்னையில் மாநில மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலகத்தின் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராம சுகாதார செவிலியர்கள் வேறு பணிகளில் அமர்த்தக் கூடாது, பணிப்பளு அதிகரிப்பு கூடாது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் தொடரும் என்று செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்