Skip to main content

"தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ற உணவை உண்ணுங்கள்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற விழாவில் பேசிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, "நம் நாட்டில் இந்து என சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியானது அல்ல; யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கவில்லை; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும். 

CHENNAI FUNCTION VICE PRESIDENT OF INDIA VENKAIAH NAIDU SPEECH


பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் மற்ற நாட்டு தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவை; நமக்கு அல்ல. நம் நாட்டு தட்ப வெப்ப சூழலுக்கு இட்லி, பொங்கல், மோர், ரசம், வத்தக்குழம்பு போன்றவையே ஆரோக்கியம். யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது 'BODY' க்காக; மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது. தாய் மொழியை நாம் மறக்கக்கூடாது." இவ்வாறு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்