சென்னையை அடுத்து கீழ்கட்டளையைச் சேர்ந்த தொழிலதிபரான பழனிச்சாமி சேலையூர் அருகே ஆடி காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக இருவர் சரண் அடைந்துள்ள நிலையில் இந்த கொலைக்கு காரணம் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் இந்தக் கொலையை செய்த நபர் தற்போது தலைமறைவாக உள்ள மப்பேடு ஜெய்சக்தி ஆன்மீக பீடத்தின் ரஞ்சித் குமார் குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/x9ij9vTHckZhz5fUIY46tT_N1uGRJMAm61Ww3f-Twlw/1554002522/sites/default/files/inline-images/_16.jpg)
திருநங்கை சாமியாரான ரஞ்சித் குமார் பில்லி சூனியம் என்ற பெயரில் பலரை அச்சுறுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. ரஞ்சித் குமார் வீட்டில் நள்ளிரவு அமானுஷ்ய பூஜை, பரிகாரம் பூஜைக்கு பலிகொடுக்க ஏராளமான ஆடுகள் வளர்த்து வந்திருக்கிறார் ரஞ்சித்குமார். ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ள பழனிச்சாமி தனது தொழிலில் முன்னேற்றம் அடைய பல்வேறு ஆன்மீக வழிபாடுகளில் இறங்கியிருந்தார். அதை சமீபத்தில் அறிமுகமான ரஞ்சித்குமார் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ga8c225HcMFLPUSnTEctgsjRJtd7twRp_-VAG2aSr2o/1554002535/sites/default/files/inline-images/z2_13.jpg)
முதலில் அவரை ஆன்மீக அடிமையாக்கிய ரஞ்சித்குமார் மாதத்திற்கு ஒரு முறை சொகுசு கார் வாங்கும் அளவிற்கு பணம் படைத்த பழனிச்சாமியை பயன்படுத்தி அவருடைய ஜெய்சக்தி ஆன்மீக பீடத்தை பெரிய அளவில் விரிவாக்க எண்ணி அவரை பலவகைகளில் ஏமாற்றி பயமுறுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/BpSOyWtz4iqRUq9uuWiOOuwt08hZsUK2Kyi26qxSj6A/1554002584/sites/default/files/inline-images/z3_16.jpg)
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/0ETcBrprBZ-giU1McJpeerca-FiOSxQ8Sm-xjlIuUu0/1554002551/sites/default/files/inline-images/z4_13.jpg)
ஒரு கட்டத்தில் ரஞ்சித் குமாரின் போலி முகம் தெரிய வர ஆத்திரத்தில் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார் பழனிச்சாமி. சம்பவத்தன்று பணத்தை வாங்கி வரச் செல்வதாக மனைவியிடம் கூறி சென்ற பழனிச்சாமி கொலை செய்யப்பட்டார்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/w6S0dHftvK0rrPCrtjUXMUPt4aMU1ukyJjW3xUDpJ8c/1554002602/sites/default/files/inline-images/z5_6.jpg)
ரஞ்சித்குமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் ரஞ்சித்குமாரை பிடித்து விசாரிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்று உள்ளனர். அதேபோல் பழனிச்சாமி உடல் சொந்த ஊரான வேடசந்தூர் கொண்டு செல்லப்பட்டது. ரஞ்சித்குமார் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றினார், வேறு யாராவது கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.