
திருப்பூரில் இரவில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் மடத்துபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி யுவராணி மற்றும் மகன் கனிஷ்க் உடன் உறவினர்கள் வீட்டுக்கு திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பூர்-அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் வந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், யுவராணி கழுத்தில் இருந்த பத்தரை சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த யுவராணி மற்றும் அவரது மகன் ஆகியோர் சாலையில் உதவி கேட்டு அலறும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.