Skip to main content

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்; மத்திய அரசு அனுமதி!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, திருவள்ளுர், நாகை ஆகிய மூன்று இடங்களில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  இந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Central government to permission 3 more medical colleges in Tamil Nadu

 

3 கல்லுரிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசு மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. புதியதாக நிறுவப்படவுள்ள இந்த 3 மருத்துவக்கல்லூரிகளால் தலா ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால் எம்.பி.பி.எஸ் இடங்கள் 4,600 ஆக உயரும். 

தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மட்டும் அரசு மருத்துவக்கல்லூரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்