Skip to main content

'18 மாதங்கள் மட்டுமே பாதுகாக்கப்படும்' - ஆர்டிஐ கேள்விக்குத் தமிழகக் காவல்துறை பதில்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

'CCTV records will be preserved for 18 months' - Tamil Nadu Police reply to RTI query

 

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காவல் நிலைய மரணங்கள் மட்டுமல்லாது மனித உரிமை மீறல்கள் ஆகியவை காவல் நிலையத்தில் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

அதன்படி தமிழகத்தில் உள்ள 1,578 காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு 38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு காவல்துறை சில பதில்களைக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், அந்த கேமராக்களின் பதிவுகள் 18 மாதங்கள் வரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது தமிழக காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“சனாதனம் குறித்து ஆளுநருக்கு தெரியவில்லை” - மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Governor does not know about Sanathanam Senior Advocate Duraisamy 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதைப் பின்பற்றுவதே சிறப்பு எனப் பேசி இருந்தார். இதனையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து 19 கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மனு செய்திருந்தார்.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட முறையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, ‘சனாதன தர்மம்தான் சிறந்த தர்மம், சனாதன தர்மத்தை தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும்’ எனப் பேசி இருந்தார். சனாதன தர்மத்தை யாரும் பின்பற்ற முடியாது. மனு தர்மத்தின் மறுபதிப்பு தான் சனாதன தர்மம். எனவே இந்த சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மம் என்றால் என்ன. சனாதன தர்மத்தை கொண்டு வந்தது யார். சனாதன தர்மம் எந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் சனாதன தர்மம் இடம் பெற்றிருக்கிறதா. இந்து மதம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய தலைவர் யார். இந்து என்றால் அதனுடைய பொருள் என்ன என்று 19 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

சனாதன தர்மம் பற்றி பேசுபவருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சனாதனம் குறித்து ஆளுநருக்கு தெரியவில்லை. அதே சமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சனாதனம் குறித்த 19 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்வி கேட்டால் குடியரசுத் தலைவராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வாறு பதில் சொல்லவில்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிப்பதற்கு  நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

Governor does not know about Sanathanam Senior Advocate Duraisamy 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கொடுக்கப்பட்ட கேள்விக்கு, இரண்டு மாதம் பதில் சொல்லாமல் இரண்டு மாதம் கழித்து இது குறித்த தகவல் ஆளுநரின் செயலகத்தில் இல்லை எனப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி இல்லாததால் மேல்முறையீடு செய்தேன். ஆனால் இதற்கு பதில் அளிக்கவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் அளிப்பதாக ஆளுநரின் துணைச் செயலாளர் கூறினார். இருப்பினும் சனாதனம் குறித்து ஆளுநர் நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.