தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரிப்பதற்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி.. புதிதாக தாக்கல் செய்த வழக்கு என்பதால் தனி நீதிபதி விசாரிக்க அதிகாரம் உண்டு. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய தாக்கல் செய்த கிரிமினல் வழக்கை பொதுநல வழக்குடன் எப்படி விசாரிப்பது? என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எந்த வழக்கையும் விசாரிக்க உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உண்டு. மத்திய அரசின் வழக்கறிஞர் தனியார் வழக்குகளை தனிப்பட்ட முறையில் நடத்தக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.