Skip to main content

கரை ஒதுங்கிய இளைஞரின் சடலம்! சோகத்தில் கிராம மக்கள்! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

The body of a young man stranded on the shore! Villagers in grief!

 

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே உள்ளது டி. தேவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு (36), தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆற்றைக் கடந்து அவரது நண்பர்கள் சென்றபோது குரு மட்டும் தான் பிறகு வருவதாகக் கூறி இக்கரையிலேயே தங்கிவிட்டார்.

 

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வெகு நேரமாகியும் குரு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதையடுத்து, அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தங்களது மகனைக் காணவில்லை என புகார் அளித்தனர். அதேசமயம், அவரது நண்பர்களும் ஊர் மக்களும் கடந்த 4 நாட்களாக தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் பல்வேறு இடங்களில் குருவை தேடிவந்தனர். 

 

இந்நிலையில், நேற்று (13.12.2021) மாலை தேவனூர் கூட்டு ரோடு அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரமாக குருவின் சடலம் கிடப்பதை சிலர் தற்செயலாகப் பார்த்துள்ளனர். இந்தத் தகவல் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரும் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். காணாமல் போன இளைஞர் 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அரகண்டநல்லூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்