Skip to main content

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 

Published on 31/01/2022 | Edited on 01/02/2022

 

 BJP's first phase candidate list released!

 

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. தேமுதிக, அதிமுக கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், திமுக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

 

அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தமிழக பாஜக வெளியிட்டுள்ளது.  கோவை, ஓசூர், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை, ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் உதகை, நாமக்கல், திருச்செந்தூர், ஆம்பூர் உள்ளிட்ட 13 நகராட்சிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்