
பாஜகவினர் அவதூறு கருத்தை தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,
எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் தனது டுவிட்டரில் கருத்து சொல்லி இருக்கிறாரே என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், டிவிட்டரை நான் பார்க்கவில்லை. அதனால் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து எச்.ராஜா தனது டிவிட்டரில் இழிவாக கருத்து தெரிவித்து உள்ளாரே? என நிருபர்கள் கேட்டபோது, அதற்கும் நான் டுவிட்டரை பார்க்கவில்லை என கூறினார்.
பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறி வருகிறார்களே? என கேட்ட போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை பாஜக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்றார்.