Skip to main content

“முன்பே திட்டமிட்டதால் சொல்லும் அளவிற்கு சேதம் இல்லை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

'Because it was planned in advance, there is no damage to be said'- Chief Minister M.K. Stalin's interview

 

கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதமடைந்துள்ளது. 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கோவளம் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்துள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர், ''நேற்றைய தினம் நான் தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பினேன். திரும்பியவுடன் இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமிற்கு நேரடியாகச் சென்று என்ன நிலைமை என்பதை ஆய்வு செய்தேன். புயல் எந்த மாவட்டத்திற்கு வரும், மழை எங்கே அதிகம் பெய்யும் என்பதை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி காட்சி மூலமாக நேரடியாக பேசி விவரங்களை தெரிந்து கொண்டேன்.

 

அதற்குப் பிறகு விடிய விடிய ஒவ்வொரு ஆட்சித் தலைவரிடத்திலும் என்ன நிலைமை; எப்படி இருக்கிறது; புயல் கடந்து விட்டதா; அதிலும் குறிப்பாக மகாபலிபுரத்தில் அந்த புயல் கடக்கிறது என்ற செய்தி வந்தது. அந்த ஆட்சித் தலைவரிடம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று காலை தென்சென்னை பகுதியில் கொட்டிவாக்கம் பகுதியிலும் ஈஞ்சம்பாக்கம் பகுதியிலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மீனவர்கள் பகுதிக்கு சென்று அந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்துவிட்டு இப்பொழுது வடசென்னை பகுதி இருக்கக்கூடிய காசிமேடு பகுதிக்கு வந்திருக்கிறேன்.

 

nn

 

மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து தமிழகம் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு செயல்பாடு காரணமாகவும் மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக் கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்துள்ளார்கள்.

 

இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் போன்ற பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மின்சார வாரியத்தின் ஊழியர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், குறிப்பாக தூய்மை பணியாளர்கள் அவர்களெல்லாம் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது பாராட்டிற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வாங்கப்படும்'' என்றார்.

 

முன்னதாக சென்னை ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.