Skip to main content

சசிகலாவை மே13ல் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

 

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே-13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   

 

s

 

சசிகலா ஆஜராகும்போது சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும், நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காகவும் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா,  சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  4 ஆண்டுகள் சிறை தண்டனையில் தனது இரண்டு ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார் சசிகலா. இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே-13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்