ஆஸ்திரேலிய கிாிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடக்கும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் வீரா்கள் மற்றும் ரசிகா்களை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகம் வந்துள்ளாா். அவருடன் மேலும் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து இருக்கிறாா்கள்.
நெல்லையில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையை நடந்த போட்டியில் ஷேன் வாட்சன் கலந்து கொண்டு வீரா்களை உற்சாகப்படுத்தினாா். இதற்கிடையில் ஷேன் வாட்சன் நெல்லையில் இருந்து காா் மூலம் கன்னியாகுமாி வந்தாா். பின்னா் அவா் படகு மூலம் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபத்துக்கு சென்றாா். அங்கு அவரை திருவள்ளுவா் சிலையை வடிவமைத்த பொறியாளா்கள் வல்லுனா்களில் ஒருவரான ராஜீ வரவேற்றாா்.
திருவள்ளுவா் சிலையை உற்று பார்த்து ரசித்த ஷேன் வாட்சன் திருவள்ளுவா் சிலையின் பாதங்களை தொட்டு வணங்கினாா். அதன் பிறகு விவேகானந்தா் மண்டபத்தில் சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டாா். அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஷேன் வாட்சனுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.