1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர், மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதிவரை நடந்தது. இரண்டு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் சரவணன் தலைமையிலான ராணுவ வீரர்கள் முன் நின்று போர் செய்து, சரவணன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்.
கார்கில் போரின் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று (26.07.2021) வெஸ்ட் ரவுண்டானா பள்ளிக்கு அருகில் உள்ள மேஜர் சரவணன் திருவுருவப் படத்திற்கு ராணுவ வீரர்கள் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்ணல் கே. ஜாய், மேஜர் அக்சய் புன்ச், என்சிசி விமானப்படை தலைமை அதிகாரி குணசேகரன், ராணுவ என்சிசி தலைமை அதிகாரி காளியப்பன், மேஜர் சரவணன் அறக்கட்டளை நிர்வாகிகள், இயக்குநர் செந்தில், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மலர்வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினர்.