Published on 28/03/2020 | Edited on 28/03/2020
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆக இருந்த நிலையில் தற்பொழுது இந்த எண்ணிக்கையானது மேலும் ஒன்று அதிகரித்து 42 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் 25 வயது வாலிபர் ஒருவருக்கு தற்பொழுது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வாலிபர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.