Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University offers higher education opportunities to Scheduled Tribe students

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிராய்வு மையத்தில் பட்டியல் (இருளர்) பழங்குடி இன மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் மையம், பரங்கிப் பேட்டைப் பகுதியில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள் சார்ந்துள்ள நிலப்பரப்பிற்கான வளர்ச்சி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மையத்தின் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் சேற்று நண்டு வளர்ப்பு முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இம்மையத்தால் இதுபோன்று நடத்தப்படுகின்ற பயிற்சிகளின் மூலம் கடல்சார் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதனால் அவர்களில் சிலர் கடல்சார் தொழில் முனைவோராகவும் உருவாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகின்றது. இதற்குச் சான்றாக இந்த வருடம் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் இரண்டு இருளர் பழங்குடியினர் குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றனர்.

 

அம்மாணவர்கள் B. Voc. Aquaculture துறையில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகம் அவ்விரு மாணவர்களுக்கும் தமிழக அரசின் பழங்குடியினர் நல கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தந்து அவர்கள் உயர் கல்வியைத் தொடர உதவுகின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து நன்றி கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்