Published on 22/04/2019 | Edited on 22/04/2019

வடசென்னை தொகுதியின் வாக்குப்பதிவு பெட்டிகள், சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ளது. அந்த இடத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்தார், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன். அப்போது அவர், இந்த இடத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வருகிறோம். இங்கு மட்டும் மொத்தம் 45 சிசிடிவி கேமிராக்கள் உள்ளன. சீல் வைத்த அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை எனக்கூறினார்.