Skip to main content

"சசிகலாவுக்கு பாதுகாப்பு வேண்டும்!" - அதிமுக பிரமுகர் மனு!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

admk leader of theni district, sasikala police dgp


சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், "சசிகலா பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 09.00 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்" என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  

 

தமிழகம் திரும்பும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிவருகின்றனர். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sasikala


இருப்பினும், சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய அ.தி.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினர். 

 

இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வின் அம்மா பேரவை அவைத் தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர், தமிழகம் வரும் சசிகலாவுக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தபால் மூலம் டி.ஜி.பி.க்கு மனு அனுப்பியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்