Published on 26/12/2020 | Edited on 26/12/2020

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை இன்று (26/12/2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.