Skip to main content

88 ஆயிரம் ரயில்வே ஊழியர்களின் கதி? அதிர்ச்சியில் ரயில்வே ஊழியர்கள்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஊதிய கோடு 2019 சட்டப்பிரிவு 67-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவை முன்மொழிந்திருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள 8 மணி நேரத்துக்கு பதிலாக 9 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக் கலாம் என்கிறது அந்த வரைவு. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
 

railway



இந்த மாற்றம் ஷிஃப்ட் அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன். “ரயில்வே துறையில் மட்டுமே 8 லட்சம் ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் டியூட்டி பார்க்கிறார்கள். நாளொன்றுக்கு 24 மணிநேர பணியை, 8 மணிநேரம் வீதம் மூன்று ஊழியர்கள் மேற்கொள்கிறார்கள். இதனை 9 மணிநேரமாக ஆக்கினால், இதே மூன்று ஊழியர்கள் நாள் ஒன்றுக்குக்கு 3 மணிநேரம் வீதம், ஓய்வுநாள் போக ஆறுநாட்களுக்கு 18 மணிநேரம் கூடுதலாக பணியாற்ற வேண்டிவரும். அதுவே, 9 ஊழியர்களாக இருந்தால் 54 மணிநேர பணி கூடுதலாக நடைபெறும். ஒன்பது ஊழியருக்கு ஒரு ஊழியர் மிச்சம் ஏற்படும். உலக நாடுகளில் வாராந்திர வேலையாக 35, 58 மணிநேரமே ஊழியர்களிடம் வாங்கப்படும் நிலையில், வேலைநேரத்தைக் கூட்டும் நடவடிக்கை அவர்களின் உடல் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சுமார் 88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும்'' என்று எச்சரித்தார்.

 

சார்ந்த செய்திகள்