Skip to main content

பாஜகவுக்கு 5 சீட்டு; அதிமுக பாஜக கூட்டணி கையெழுத்தானது!!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
election

 

சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக பாஜக இடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.

 

ஏற்கனவே அதிமுக பாமக இடையே கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிமுக பாஜவுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த கூட்டணிக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தினர்.

 

அப்போது பேசிய ஓபிஎஸ்,

 

மெகா கூட்டணி வெற்றி கூட்டணி அமைத்து இருகிக்கிறோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 5 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.

 

அதன்பின் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. நாற்பதும் நமதே என்ற முழக்கதோடு தேர்தலை சந்திப்போம். வருகின்ற 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக இந்த ஆதரவை கொடுக்கும் என கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்