Skip to main content

ஜாதி ரீதியிலான தொல்லை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
police


சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்களான ரகு, கணேஷ் என்ற இருவரும் புகார் மனு ஒன்றை அளிப்பதற்காக அளிக்க சென்னை டிஜிபி அலுவலகம் வந்துள்ளனர். அந்த புகார் மனுவில் ஜாதி ரீதியாக தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பல்வேறு தவறுகள் நடப்பதாகவும், அது குறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து, டிஜிபியிடம் புகாரை அளித்துவிட்டு வெளியே வந்த ஆயுதப்படை காவலர்கள் இருவரும், டிஜிபி அலுவலக வாயிலிலே மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட சக போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

தீக்குளிக்க முயன்ற காவலர்கள் ரகு, கணேஷ் இருவரும் 8 ஆண்டுகளாக ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருபவர்கள். இவர்களுக்கு அதிகாரிகள் ஜாதி ரீதியிலான தொல்லைகள் அதிகமாக தருவதாகவும், தற்போது இருவருக்கும் பணிஇடமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்