Skip to main content

18 ஆண்டுகளாகியும் மறையாத சோகம்; நினைவஞ்சலி செலுத்திய மீனவர்கள்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

18 years passed in tsunami  fishermans pay tributes in mayiladuthurai district 

 

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இதே நாள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். சுனாமி தாக்கியதன் 18 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் நினைவஞ்சலி செலுத்தினர்.

 

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தரங்கம்பாடி மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் கூடி யாகம் செய்து சுனாமியால் உயிரிழந்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர். அதனைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்ற மீனவர்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தினர். 

 

18 years passed in tsunami  fishermans pay tributes in mayiladuthurai district 

 

இதே போல் சந்திரபாடி மீனவ மக்கள் ஊர்வலமாக வந்து நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்