Skip to main content

23 வயது காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற 17 வயது சிறுவன்!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

17-year-old boy who strangled his 23-year-old girlfriend

 

தர்மபுரியில் 23 வயது இளம்பெண்ணை கழுத்தை நெரித்து 17 வயது சிறுவன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா(23). மருத்துவப் பிரிவில் பட்டம் பெற்று இவர் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஹர்ஷா கடந்த 5 ஆம் தேதி நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கழுத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

 

ஹர்ஷாவின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை பரிசோதனை செய்ததில் அவர் கடைசியாக காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் போன் பேசியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில், ஹர்ஷாவை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நானும் ஹர்ஷாவின் தம்பியும் நெருங்கிய நண்பர்கள். அவரின் வீட்டிற்குச் சென்ற பொழுது ஹர்ஷாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில் ஹர்ஷா ஓசூருக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் வேறு ஒருவரைக் காதலிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததால் ஹர்ஷாவிடம் சண்டைபோட்டேன். 

 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என்று நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதிக்கு அழைத்தேன். அப்போது அங்கு வந்த ஹர்ஷாவிடம் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டினேன். ஆனால் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால் ஹர்ஷாவின் துப்பட்டாவை வைத்து அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.” என்று சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.