Skip to main content

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி; தற்கொலை செய்துகொண்ட அரசு பள்ளி மாணவன் 

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

15 year old boy passes away in karaikal

 

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் அரசுப் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் காரைக்காலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

காரைக்காலில் உள்ள எம்.ஜி.ஆர் நகர், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது இளைய மகன் ராகவன். காரைக்காலில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார்.

 

நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை ஆர்வமாக பார்த்த ராகவன் தான் தேர்வில் தோல்வியடைந்திருப்பதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான். பெற்றோர் ராகவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த மாணவன் ராகவன் நேற்று காலை தனது அறையில் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.

 

15 year old boy passes away in karaikal

 

வெளி வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராகவனின் தாய் லீமா ரோசின், ராகவன் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டிருக்கிறார். லீமா ரோசினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட ராகவனை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

மாணவன் இறந்த செய்தி கேட்ட உறவினர்களும் நண்பர்களும் மருத்துவமனையில் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. “ராகவன் கால்பந்தாட்ட போட்டியில் சிறந்து விளங்கியவர். மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றவர். தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டது எங்கள் அணிக்கே பெருத்த இழப்பு” என்கிறார்கள் சகவீரர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்