Published on 20/06/2018 | Edited on 20/06/2018

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் டெல்லி சென்றார். அந்த பணிகள் முடிந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த சந்திப்புக்குபின் செய்தியாளர்களை சந்தித்த கமல் நாங்கள் அரசியல் குறித்து பேசினோம், கூட்டணி குறித்து பேசவில்லை எனக் கூறினார்.