கொரோனா வைரஸ் தடுப்புக்கான முயற்சிகளின் முக்கியப் பகுதியாக மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 21) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா விழிப்புணர்வு குறித்தும், சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. பின்பு நடிகர் ரஜினி பதிவிட்ட வீடியோவை ட்விட்டரின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியது.
கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் அவர்களின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும் pic.twitter.com/MPqZyTrm52
— Dr Ravikumar M P (@WriterRavikumar) March 21, 2020
திரு ரஜினிகாந்த் ட்வீட் செய்த அதே தவறான செய்தியை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியும் ட்வீட் செய்திருந்தார். தவறு என மற்றவர்கள் சுட்டிக்காட்டியதும் அதை நேற்றே நீக்கிவிட்டார். pic.twitter.com/5s5DjsXkAV
— Dr Ravikumar M P (@WriterRavikumar) March 21, 2020
இந்த நிலையில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான எம்.பி.ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், "கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் அவர்களின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், திரு ரஜினிகாந்த் ட்வீட் செய்த அதே தவறான செய்தியை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியும் ட்வீட் செய்திருந்தார். தவறு என மற்றவர்கள் சுட்டிக்காட்டியதும் அதை நேற்றே நீக்கிவிட்டார்" என்றும் கூறியுள்ளார்.