Skip to main content

''ஒரு வெற்றி முடிவை தமாகா இந்த தேர்தலில் எடுத்துள்ளது'' - ஜி.கே.வாசன் பேட்டி

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

nn

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக கூட்டணிக்கட்சிகள் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில், வெல்லக்கூடிய ஒரு நிலையை அதிமுக கூட்டணி எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''முதன்மைக் கட்சியான அதிமுக பல்வேறு தேர்தல் வியூகங்களை எங்களோடு கலந்து பேசி இந்த தேர்தலில் உறுதியாக வெல்லக்கூடிய ஒரு நிலையை எடுக்க வேண்டும். இதற்காக ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். மேலும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் ஒரு வெற்றி முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் எடுத்துள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்