Skip to main content

ஸ்டாலின் போட்ட செம்ம ப்ளான்! அதிர்ச்சியில் பிஜேபி!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். திமுக ஏற்கனவே இரண்டு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மூன்றாவது ராஜ்யசபா சீட்டை மதிமுகவிற்கு கொடுத்தது. திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது.   

 

dmk



இந்த நிலையில், வைகோ ராஜ்யசபா உறுப்பினராவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதால் திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக  என்ஆர் இளங்கோவனை ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து மதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தி அடையக்கூடாது என வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். இதன் பின்னணியில் ஸ்டாலினின் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வைகோ வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அந்த ஒரு இடத்திற்கான தேர்தல் மட்டும் தனியாக நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் நிறுத்தப் படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.   


எனவே வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு தங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்கலாம் என்று கருதிய பாஜகவுக்கு எந்த வகையிலும் வாய்ப்பு அளிக்க கூடாது என ஸ்டாலின் 4வது வேட்பாளரை களமிறக்கியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தி அடையாமல் இருக்க வைகோ செய்தியாளர் சந்திப்பின் மூலம் அதற்கான விளக்கத்தை கூற வைத்ததாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்