Skip to main content

ஸ்டாலின் கொடுத்த ஐடியாவை ஒப்புக்கொள்ளாத எடப்பாடி... திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையில் உள்ளாட்சித்துறையின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது, கிராமப்புறங்களோடு நெருங்கியிருப்பது உள்ளாட்சித்துறை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளை இன்னும் ஒருங்கிணைப்பு செய்யவில்லை என்ற புகார்,பல பக்கமிருந்தும் முதல்வர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளது. அதை எப்படி மேனேஜ் பண்றது என்று ஆலோசனை நடப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு எதிர்க்கட்சியான தி.மு.க.வின் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த மு.க.ஸ்டாலின்,அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தையும் தனிமைப்படுத்தல் வார்டாகப் பயன்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சியிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 
 

dmk



மேலும் கேரள முதல்வரும், கர்நாடக முதல்வரும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தந்த மாநிலங்களில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செல்வதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளாத நிலையில், தி.மு.க. சார்பிலான உதவிகளை அரசியல் கண்ணோட்டமில்லாமல் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 98 பேரும் ஒரு மாதச் சம்பளமான தலா 1லட்சத்து 5 ஆயிரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் திமுக எம்.பிக்கள் தலா 1 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.அதோடு தி.மு.க. எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் ஏராளமாக நிதி ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அவரவர் பகுதிகளில் சானிட்டைசர், மாஸ்க் கொடுக்கும் பணிகளும் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்