“சிவகாசி மாநகராட்சி ஒரே குடையின் கீழ் வருவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது இருக்கிறது..” என்றார், அந்த கதர்ச்சட்டை நண்பர். ‘புரியும்படி சொல்லுங்களேன்..’ என்று நாம் கூற, அவரே கேள்வி கேட்டு பதிலையும் சொன்னார்.
“இப்ப சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வா இருக்கிறது யாரு? அசோகன். அடுத்து சிவகாசி மாநகராட்சி பெண் மேயரா வருவதற்கு காய் நகர்த்துவது யாரு? எம்.எல்.ஏ. அசோகனுடைய மருமகள் பிரியங்கா. துணை மேயர்ன்னு ஒரு பதவி இருக்குல்ல.. அதுக்கு யாரை மனசுல வச்சிருக்காங்க? எம்.எல்.ஏ. அசோகனுடைய அண்ணன் மகன் கார்த்திக் விஜயகுமாரை.
பார்தீங்களா? சிவகாசிங்கிற ஊரு ஒண்ணுதான். எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர்-ன்னு மூணு பேரும் ஒரே குடும்பம்தான். ஒரே குடையின் கீழ் சிவகாசின்னு நான் சொன்னது ஒண்ணும் தப்பில்லயே?” என்று சிரித்தபடி கேட்டார் அந்த நண்பர்.
“உலகமே ஒரு குடும்பம்தான் என்றொரு உயர்வான கருத்து இருக்கும்போது, அசோகன் எம்.எல்.ஏ. குடும்பத்தை மட்டும் அதிலிருந்து பிரித்துப் பார்ப்பது சரியா?” என்று அசோகனின் விசுவாசிகள் கேட்கின்றனர்.
‘என்னமோ போங்க! மொதல்ல ஜெயிச்சு வாங்க!’ என்பதே சிவகாசி மாநகராட்சி வாக்காளர்களின் மவுனமொழியாக உள்ளது.