Skip to main content

மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டம்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019
villupuram



அனைத்து கட்சி மற்றும் விழுப்புரம் இணைப்புப் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது.
 

விழுப்புரத்தில்  உள்ள திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும், விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து பகுதிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. 

 

villupuram


 

விழுப்புரம் தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது "விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டு முதல் தேமுதிக குரல் கொடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கு புதிய மாவட்டம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆட்சியர் அலுவலகம் எப்படி தேவையோ அதேபோல விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் முகையூர்  அரசூர் மடப்பட்டு சித்தலிங்கமடம் பகுதி மக்கள்  விழுப்புரம் மாவட்டம் வேண்டுமென்று விரும்புகின்றனர்.


 

கள்ளக்குறிச்சியில் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிரன் குரலா அவர்கள் இதுவரை கள்ளக்குறிச்சியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை. மக்களின் கருத்தையோ விருப்பத்தையே கேட்டதில்லை அந்தந்த பகுதி மக்களின் கருத்து கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த பகுதியை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 

பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்