Skip to main content

இந்த சட்டமன்ற தொகுதி வேண்டாம்... எழுதிக்கொடுத்த தமிழக அமைச்சர்!!!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
admk

 

 

தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுகவில் தமிழகம் முழுவதும் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தனர். புதிதாக பிரிக்கப்பட்ட பல இடங்களில் சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கிறது. 

 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகர், புறநகர் இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் மற்றும் மா.செ.வுமாக இருந்தவர், உடல்நிலை காரணம் காட்டி ஏற்கனவே எனக்கு மா.செ. பதவி வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தார். அந்த நேரத்தில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணி ஆலோசனையில் பெயரில்  திருச்சி முன்னாள் எம்.பி. குமாருக்கு மா.செ. பதவி வழங்கப்பட்டது.  

 

குமார் மா.செ. ஆன பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் மா.செ. ஆவதற்கு பல வழிகளில் முயற்சி செய்தி கொண்டிருந்தார். தற்போது டெல்டா பொறுப்பாளராக வைத்தியலிங்கம் வந்த பின்பு அவருடைய சிபாரிசில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கிய பகுதிகளுக்கு மா.செ.வாக நியமிக்கப்பட்டார்,

 

தற்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துறையூர் தொகுதி தொலைவில் இருப்பதால் என்னால் அவ்வளவு தூரம் சென்று தொகுதி வேலை செய்ய முடியாது,  என்று அந்த தொகுதி வேண்டாம் அதற்கு பதிலாக ஶ்ரீரங்கம் தொகுதியை சேர்த்து எனக்கு கொடுங்கள் என்று எழுதிக்கொடுத்தார்.

 

இதன் பிறகு நடந்த ஆலோசனையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜக்கு ஒதுக்கப்பட்ட துறையூர் தொகுதியை பரஞ்சோதிக்கு ஒதுக்கப்பட்ட ஶ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதிகளோடு சேர்த்து நான்கு தொகுதிகள் பரஞ்சோதிக்கு ஒதுக்குப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழக அமைச்சர் ஒருவர் தனக்கு மா.செ. பதவியில் ஒதுக்கப்பட்ட தொகுதி வேண்டாம் என்று சொல்லியிருப்பது திருச்சி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்