
அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (17ம் தேதி) மாலை 5.10 மணிக்கு துவங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பூத் கமிட்டியை அமைப்பதும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் விவாதிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுகவின் மாநில மாநாடு தொடர்பாக விவாதிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஓ.பி.எஸ். - டி.டி.வி. தினகரன் சந்திப்பு மற்றும் இணைவு குறித்து இன்றைய அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் விஷச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் நிலையில், அது தொடர்பாக விவாதித்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.