சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்றும், முரசொலி வைத்திருத்திருந்தால் திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, நான் என்ன சொல்றேன், முதல்ல அந்த துக்ளக்கை வாங்கி உங்க ரசிகர்களுக்கு எல்லாம் குடுங்க, ஏன்னா அவன்தான் உங்க படம் ஓடனும்னு தரையில சோறு போட்டு தின்னுட்டு இருக்கான். நாங்க தட்டுல சாப்பிடும்போதே கண்ட கண்ட நோய் வந்துடுது என்றும், ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறைப் படங்கள் என்றும், ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்வதாகவும் கூறினார்.
ரஜினியை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேட்டால் ரஜினியிடம் பதில்லை. ஆனால் ரஜினி முதல்வராக துடிக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார். மேலும் பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதி என்றும் நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார். பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி என்றும், அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாத பயங்கரவாதம் என்றும் கூறினார்.