Skip to main content

ம.ஜ.க. கூட்டணி தேவையில்லை! - சதானந்த கவுடா திட்டவட்டம்

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை என சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.

 

gowda

 

மே 12ஆம் தேதி நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. 111 தொகுதிகளில் முன்னிலையுடன் பாதுகாப்பான நிலையில் உள்ளது.

 

ஆனால், காலையில் இருந்த நிலையைப் பொருத்தவரை தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்பு இருந்தது. ஒருவேளை அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் பா.ஜ.க. ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணியை நாடவேண்டி இருக்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.

 

இந்நிலையில், பா.ஜ.க. தலைவரும், கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சதானந்த கவுடா, ‘ம.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகளை நாங்கள் இப்போதே பெற்றுவிட்டோம்’ என பேசியுள்ளார். வாக்கு எண்ணிக்கை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்றாலும், பா.ஜ.க. பல தொகுதியில் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சிக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்