கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.
அப்போது அவர், ஆரோக்கியமான அரசியல் நிலவ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால் தமிழக முதல்வர் பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் தனியாகச் சென்று மக்களை சந்திக்க முடியுமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலன் சவால் விடுகிறார். பதிலுக்கு சவால் விட்டால் நன்றாக இருக்காது. அவரால் துண்டுச் சீட்டு இல்லாமல் பேச முடியுமா? என்று பதிலுக்கு சவால் விட்டால் நன்றாக இருக்காது.
காமராஜரை விமர்சித்து அரசியல் செய்த திமுகவினர்தான் மூப்பனார் பிரதமராவதையும், அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதையும் தடுத்தனர்.
பால் கொள்முதல் விலை உயர்வைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்தான், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தவர். தமிழகத்தில் பால் உற்பத்தியில் 4.5. லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 6 ரூபாய் வரை உயர்த்தியதற்கு பதிலாக பாதியாகக் குறைக்கலாம். மீதம் உள்ளவற்றை அரசு மானியமாக வழங்கலாம் என்றார்.