பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்சிப் பதவியை எடப்பாடி பறித்தது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கேட்ட போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பொறுத்தவரை கட்சியின் கடிவாளத்துக்கு அடங்காத குதிரையாகவே தொடர்ந்து இருப்பது, எடப்பாடியை ஏகத்துக்கும் எரிச்சலடைய வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சு தொடர்ந்து பா.ஜ.க.வின் இந்துத்வா ஆதரவுக் குரலாகவே இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியும் அடிக்கடி தடாலடியாக விமர்சித்து, அந்தத் தரப்பு மக்களைக் கொதிக்க வைத்தார். அவரைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் இனி அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடமாட்டாங்கன்னும், அதனால் இந்துக்கள் ஓட்டுகளை முழுமையாக வாங்குறதுக்காகத்தான் பேசுறேன்னும் சொல்லிவந்தார். அதோடு, அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான அன்வர்ராஜா, குடிமக்கள் சட்டத் திருத்தத்துக்கு நாம் ஆதரவாக இருந்ததால் தான் தோற்றோம் என்று பகிரங்கமாவே கூறியதைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்காரோ அதுபோல நானும் இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கேன்னு ஸ்பீட் பிரேக்கர் இல்லாம போய்க்கிட்டே இருந்தார்.
மேலும், ராஜேந்திர பாலாஜியின் போக்கு பிடிக்காத அ.தி.மு.க. சீனியர்களும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்ஸிடம் கூறினார்கள். இந்த நிலையில், இந்துமதத்தை விமர்சித்ததால், அதற்கு பழிவாங்கும் வகையில் கரோனா தாக்குதல் நடந்திருக்கு என்று ஊரடங்கு நாளில் ராஜேந்திர பாலாஜி ட்வீட் செய்ய, அது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை உண்டாக்கியது. இதனால் அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து கட்சித் தலைமை நீக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அவர் சீக்ரெட்டா ரஜினியைச் சந்தித்தார் என்று எடப்பாடி காதுக்கு ஒரு தகவல் போயிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனால் முதல் பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத் தான் என்று இ.பி.எஸ். நினைக்கிறார். அதனாலதான் இந்த அதிரடி நடவடிக்கை என்றும் சொல்லப்படுகிறது.