தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுகின்றது. அதற்கான ஆரம்பக்கட்ட அடையாளங்கள் காங்கிரஸ் மேலிட பிரதிநிதியான தினேஷ் குண்டு ராவ் அவர்கள் சத்திய மூர்த்தி பவனில் நடத்திய மீட்டிங்கில் வெளிப்பட்டது.
அந்த மீட்டிங்கில் பேசிய தினேஷ் குண்டு ராவ், தி.மு.க, காங்கிரஸுக்கு 21 இடங்களுக்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டது. அந்த 21 இடங்களை நாம் பெற்று திமுக கூட்டணியில் நிற்க வேண்டுமா. அதற்கு பதில் கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து மூன்றாவது அணியை நாம் உருவாக்கலாம். மைனாரிட்டி மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது.
ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் இணைந்தே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தால், பீஹாரில் தேஜஸ்ஸ்ரீ யாதவும், ராகுல் காந்தியும் சேர்ந்து சுற்றுப் பயணம் செய்ததுபோல ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும். காங்கிரஸ் கட்சியையும் புணரமைக்க முடியும். அதற்கு கமல்ஹாசன் தயாராக இருக்கிறார். டிடிவி தினகரனிடம் பேசி அவரை நம் அணிக்கு கொண்டுவந்துவிட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிடுமென பேசியிருக்கிறார். இது திமுக முகாமிற்கு தகவலாக சென்றுள்ளது. திமுக முகாமில் காங்கிரஸ் போனால், அதற்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்கலாம் என கருத்துகள் பேசப்பட்டுவருகின்றது.