Published on 23/03/2022 | Edited on 23/03/2022
2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் மற்றும் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி சட்டமன்றத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.