Published on 29/06/2022 | Edited on 29/06/2022

சசிகலா அ.தி.மு.க. அலுவலகம் வருகிறார் என்று அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் அருகில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் யார் தலைமையென உட்கட்சிப் பிரச்சனை உச்சத்தில் நிலவி வருகிறது. தலைமைப் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் போட்டிப்போட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, சசிகலா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த சூழலில் தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம் கட்சியில் பொதுச்செயலாளர், அ.தி.மு.க. அலுவலகம் வருகிறார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட கட்சியின் நிர்வாகிகள் சார்பில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அருகே ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.