Published on 01/09/2024 | Edited on 01/09/2024

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா நகர் செக்டார் 94 பகுதியில் உள்ள பிரேத அறையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், பிரேத அறையின் அருகே ஜோடி ஒன்று பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வீடியோவில் இடம்பெற்ற 2 பேரையும், அந்த வீடியோவை படம் பிடித்த ஒருவரையும் புதிய குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், அந்த அறையை சுற்றி சி.சி.டி.வி கேமராக்களை அமைக்க முடிவு செய்துள்ளனர். பிரேத அறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி தொடர்பான வீடியோ வைரலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.