ஆந்திர மாநிலம் சித்தூரில் மொபைல் போன் வாங்கித்தராததால் இளம்பெண் தூக்கிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர்கள் மெகபூப்பாஷா-அலிஷா தம்பதிகள். மெகபூப்பாஷா லாரி டிரைவராக வேலைசெய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ரெட்டி சமீரா என 19 வயது மகள் இருந்துள்ளார். சமீரா அங்குள்ள அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் பாஷா கொல்கத்தாவிற்கு லாரி ஓட்ட சென்றுவிட்டார். அப்போது அப்பாவிற்கு போன் செய்த சமீரா தனக்கு வரும்போது ஆண்ட்ராய்ட் போன் வாங்கிவர சொல்லி கேட்டிருக்கிறார் ஆனால் அவரோ படிக்கும் வயதில் போன் வாங்கித்தர முடியாது என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து அழுதுள்ளார் சமீரா. அவரது அம்மா ஆறுதல் சொல்லியும் சமீரா அழுகையை நிறுத்தவில்லை.
இந்நிலையில் இரவு எல்லோரும் தூங்கி கொண்டிருந்த வேளையில் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி சித்தூர்-2 காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.