Published on 15/03/2019 | Edited on 15/03/2019
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். மேலும், ஸ்ரீசாந்த் போட்டியில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீசாந்த் மீதான கேரள உயநீதிமன்றம் தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக ஸ்ரீசாந்தின் மனு மீது 3 மாதத்தில் முடிவெடுக்க பிசிசிஐக்கு உத்தரவிடப்ப்ட்டுள்ளது.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/wr4nl6uW4rgcfbJElsECTg6D5Crl9vasbcrubWtdSSA/1552647326/sites/default/files/inline-images/sree1.jpg)