Skip to main content

ரயிலில் சிவனுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சீட்...

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வாரணாசியில் காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 
 

shivan temple

 

 

இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சூற்றுல கழகத்தின் மூலம் தனியாரால் இயக்கப்படும் 3 வது ரயில் இதுவாகும். உபி வாரணாசியில் புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலானது லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீக்கு 19 மணிநேரம் பயணிக்கிறது. 

சிவன் தளங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பி-5 பெட்டியில் படுக்கை எண் 64 சீட்டை சிவனுக்காக ஒதுக்கியுள்ளனர் அதிகாரிகள். அந்த இருக்கையை சிறு கோவிலாகவே உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், "வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64ஆம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்