Published on 29/01/2022 | Edited on 29/01/2022

இந்தியாவின் 73 ஆம் ஆண்டு குடியரசு தினம் கடந்த 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கம்போல குடியரசு தினத்தின் மூன்றாம் நாளான இன்று, முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், இசைக் கருவிகளை வாசித்த படி முப்படைகளின் இசைக்குழுக்களும் மிடுக்காக அணி வகுப்பில் பங்கேற்றனர். முப்படை வீரர்களின் மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
கரோனா பாதிப்பு காரணமாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.